ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “
செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம்.
இந்திய "
செவிலியர்கள்" உலக அரங்கில் அங்கீகரிக்க படுகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியே.
இன்று வந்துள்ள ஒரு
செய்தியில் அரசு (மறுத்துவ துறை என்று சொல்லாமா) தொலை நோக்கு திட்டம் வகுக்கா விட்டால் வரும் காலத்தில் அந்த இன்றியமையாத சேவையை இந்தியா எப்படி இழந்து தவிக்க போகிறது என்பதை அறியும் போது வருத்தமாக உள்ளது.
மும்பையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு செவிலியர் ஒரு நாளுக்கு 70 நோயாளிகளை கவனிக்க வேண்டும் என்ற விகிதாசாரத்தில் உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. மற்ற தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலைமை ஒன்றும் பெரிதாக வித்யாசபடும் என்று எண்ணவில்லை.
இந்த செய்தி அரசுக்கு தெரியாதா? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை யாராவது தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.