(no title)
அரசு ஊழியர்கள் இனி காலை, மாலை இரு வேளையும் வருகை பதிவேடில் கையெழுத்து இட தேவை இல்லை என அறிவிக்க பட்டுள்ளதாக தெரிகிறது.
சுய ஒழுக்கம், பணி ஒழுக்கம் என்று இரண்டு உள்ளது, இந்த இரு வேளை கையெழுத்து மூலம் பணி ஒழுக்கம் தான் வலியுருத்த பட்டது என்பது என் எண்ணம். என் எண்ணம் தவறா சொல்லுங்களேன்.
(இது ஒரு நிஜமான ஏக்கம் தான் தயவு செய்து அரசியல் சாயம் பூசாதீர்கள்)
12 Comments:
பி.பி.ப.ஒ :-(
பள்ளிக்கூட மாணவர்கள் மாதிரி அவங்களும் ஆகக்கூடாதுன்னு பண்ணியிருப்பாங்க...
(ஜெயிலில் தலையை எண்ணற மாதிரியா இது?)
பணி ஒழுக்கத்தை இப்படியா வலியுறுத்துவது? வேற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் இப்படியாங்க இருக்கு?
( அரசியல் இல்லைங்க இதில்)
பி.பி.ப.ஒ :-(
இதுக்குத்தான் வந்தேன் :))
முத்து,
பள்ளிக்கூட மாணவர்கள் அறியாமை மற்றும் விளையாட்டு தனமாக இருப்பதால் அவர்களுக்கு இரு வேளை அட்டெண்டன்ஸ் சரி அது ஒரு கட்டுப்பாட்டுக்கு தான். அத மீறி வீனா போனவங்களும் இருக்காங்க/வென்றவங்களும் இருக்காங்க.
அரசு ஊழியர்களுக்கு இத பண்ணறதுனால என்ன சுதந்திரம் பறிபோகுது எனக்கு இன்னமும் புரியல (இல்ல புரிய மறுக்கிறேனா?)
//வேற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் இப்படியாங்க இருக்கு?//
அங்கயும் வேலை ஒழுங்கா, சரியான நேரத்துல நடக்கறது/செய்யறது இல்லனு சொல்லுங்க.
//இதுக்குத்தான் வந்தேன் :))//
நீங்களாவது வருவீங்கனு தெரிஞ்சு தான் போட்டேன்:))
கையெழுத்து போடுவதால் எல்லாம் பணி ஒழுக்கம் வந்து விடாது நன்மனம்.
தனிமனித ஒழுக்கம் இருந்தால் எல்லாம் தானாக நடக்கும்.
"எந்த நேரம் வருவது என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு பணிகள் பார்த்தோம் என்பது தான் முக்கியம்"
//"எந்த நேரம் வருவது என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு பணிகள் பார்த்தோம் என்பது தான் முக்கியம்"//
அறிவிப்பு சரினு சொல்லரீங்க, OK
அறிவிப்பு சரியா, தப்பானு எனக்கு தெரியவில்லை. பணியில் தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்று சொல்கின்றேன். யாருவது பார்த்தால்,இருந்தால்(அதிகாரி) தான் என் வேலையை செய்வேன் இல்லாவிட்டால் செய்ய மாட்டேன் என்று இருப்பது தவறு என்று சொல்கின்றேன்.
//நீங்களாவது வருவீங்கனு தெரிஞ்சு தான் போட்டேன்:))//
தல..தம் பிடித்து பத்தாவது கொண்டு வந்தற மாட்டம்...:))
லேட்டா வந்தாலும் வரவில்லையேன்றாலும் பசங்களுக்கு ஜாலி தான் அதுலபோயி கவலை படுறியே ராசா
யப்பா ஒன்பது போட்டாச்சிப்பா இன்னும் ஒன்னே ஒன்னு ப்ளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
நியாயமாக இவர்களிடம் 5 நிமிடத்திற்கு ஒரு முறை அவர்கள் seat-ல் attendance எடுக்க வேண்டும்
இந்த கையெழுத்து போடுவதால் தனி மனித ஒழுக்கம் வளரப்போவது இல்லை.. ஆனால் குறைந்த பட்சம் (ஒரு சில) அரசு ஊழியர்கள் மாலை வரையாவது அலுவலகத்தில் இருப்பர்கள்..
இந்த சலுகைக்கு அவசியம் எதுவும் இருப்பதாக என் அறிவுக்கு எட்டவில்லை.
//தனிமனித ஒழுக்கம் இருந்தால் எல்லாம் தானாக நடக்கும்.//
முழுதும் உடன்படுகிறேன்..ஆனால், இங்கு அது வரும் சாத்தியக்கூறுகள், தொலைதூரத்தில் கூட தெரிய வில்லை..
//இந்த சலுகைக்கு அவசியம் எதுவும் இருப்பதாக என் அறிவுக்கு எட்டவில்லை//
எனக்கும் அதாங்க தோனித்து
Post a Comment
<< Home