நல்லொழுக்கம்

Tuesday, May 30, 2006

முதல் பதிவு!

நண்பர்களே வணக்கம்!

பதிவுனா என்னனு ஒங்க எல்லாருக்கும் தெரியும் ஆனா நான் அந்த பதிவ பத்தி இங்க சொல்ல வரலங்க.

நாம செய்யற வேலைனால ஏற்படற கெட்ட விளைவுக்கு நாமே தான் பொறுப்பு இல்லீங்களா? ஆனா அத யார் மேலயாவது திருப்பி விடலாமானு நம்மல்ல பல பேர் தேடறது மறுக்க முடியாது, இது நமக்கு சின்ன வயசுலயே எப்படி பதிஞ்சுடுதுனு சொல்லறது தாங்க இந்த முதல் பதிவோட நோக்கம்.

நம்மள்ள பலர் குழந்தை பருவத்துல கவுந்து, நீஞ்சி,தவழ்ந்து அப்புறம் நடந்து தான் இப்ப இருக்கற நிலைக்கு வந்திருக்கோம். இதுல நடக்கற வயசுல பதியற ஒரு ஒழுக்கம் தான் பிற்காலத்துல (அதாவது சுயமா யோசிக்கற காலம் வர்ற வரைக்கும்) நம்மல வழி நடத்துதுனு என்னோட எண்ணம், அது என்ன.....

குழந்தை நடக்கும் போது கீழ விழறது சகஜம், அது விழும்போது பக்கத்துல யாராவது இருந்தா மொதல்ல அவங்கள பாக்கும், அவங்க கண்டுக்கலைன்னா பேசாம எழுந்து அடுத்த விளையாட்டுக்கு போயிடும், அவங்க கண்டுக்கறாங்கனு தெரிஞ்சா கொஞ்சம் சிணுங்கும் இல்ல அழும் (கண்டுக்கறவங்கள பொருத்து)........ இங்க தாங்க வருது இந்த ஒழுக்கம்.

குழந்தை விழறது அது நடக்கறதோட விளைவு, அதுக்கே அது தெரியும் அதனால தான் யாரும் கண்டுக்கலைனா பேசாம போயிடும், ஆனா நாம என்ன செய்யறோம் அது சாதாரணமா விழும் போது அச்சச்சோ அப்படினு ஒடி போய் தூக்கறோம். இங்க அதுக்கு என்ன சொல்றோம், சாதாரணமா விழுந்தாலும் யாரையாவது ஆருதலுக்கு எதிர்பாக்கணும் அப்படினு பதிய வைக்கறோம்,
இதவிட நம்மள்ள பலரோட அடுத்த செயல் தாங்க ரொம்ப தாக்கத்த ஏற்படுத்துது அது குழந்தைய சமாதான படுத்த, விழுந்த எடத்த அடிக்கறது. இப்படி அடிக்கும் போது நாம என்ன பதிய வெக்கறோம்,
நீ நடந்த, நீ விழுந்த ஆனா பழிய வேற ஒருத்தர் மேல போடு. உன் செயலால நீ அடஞ்ச கெட்ட பயன ஏத்துக்கணும்னு சொல்லித்தர மறந்திடறோம்.

இங்க சாதாரணமா விழும்போது தான் பதற வேண்டாம்னு எண்ணம் மத்த சமயத்துல இல்ல. ஆனா எப்படி விழுந்தாலும் பழிய மத்தவங்க மேல போடறத மட்டும் பதிய வெக்காம இருக்கலாமே.

14 Comments:

At 9:25 PM, said...

test

 
At 5:02 AM, said...

பதிவு நல்லா இருக்குங்க.

குழந்தையா இருக்கப்பவே பகை உணர்ச்சியைப் பெரியவுங்க இப்படித் தரையை அடிச்சுத் தூண்டி விட்டுடறோம்(-:

 
At 8:19 AM, said...

நன்றி துளசி மேடம்.

 
At 6:58 PM, said...

கலக்கறீங்க நன்மனம்.. இதே மாதிரி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்:)

 
At 7:33 PM, said...

நன்றி பொன்ஸ்.

பாப்போம் தொடர்ந்து எழுத சரக்கு தயார் பண்ணனமே. மொதல்ல கொஞ்சம் மெதுவா எழுதலாம்னு எண்ணம் பாக்கலாம் என்ன நடக்குதுனு.

 
At 11:47 AM, said...

தொடர்ந்து எழுதுங்கள்..

 
At 11:55 AM, said...

நன்றி குப்புசாமி. தொடர்ந்து எழுத தான் ஆசை.

 
At 3:57 PM, said...

நல்ல பதிவு.. தொடர்ந்து எழுதவும்..

 
At 4:19 PM, said...

நன்றி மனதின் ஓசை ஹமீத்

 
At 1:17 AM, said...

வாழ்த்துக்கள் நன்மனம்.தொடர்ந்து நல்ல பதிவுகளாக அளியுங்கள்

 
At 2:31 AM, said...

நல்ல மனம் வரவேண்டுமானால்,
எதைப் பழக்க வேண்டும் என்று
நன்மனம் சொல்லாமல் வேறு யார் சொல்வது!?

நல்லா இருக்கு!

 
At 12:32 PM, said...

நன்றி திரு.$elvan, நன்றி திரு.SK

 
At 12:00 PM, said...

//இங்க சாதாரணமா விழும்போது தான் பதற வேண்டாம்னு எண்ணம் மத்த சமயத்துல இல்ல. ஆனா எப்படி விழுந்தாலும் பழிய மத்தவங்க மேல போடறத மட்டும் பதிய வெக்காம இருக்கலாமே.//
இது இயல்பு, தன்னம்பிக்கை இல்லாத பெரும்பாலோனர்கள், நல்லது நடந்தால் கடவுளையும், தீயது என்றால் அடுத்தவர்களை சாடுவதும் ஆராயமல் நடக்கும் பிழை. எல்லாவற்கும் தானும் காரணம் என்று நிதர்சனத்தை பார்பவர் சிலரே.

 
At 12:20 PM, said...

//எல்லாவற்கும் தானும் காரணம் என்று நிதர்சனத்தை பார்பவர் சிலரே.//

அத சொல்லிக்கொடுக்கும் கடமை இன்றைய இளைய பெற்றோர்கள் கிட்ட இருக்கு.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4